உக்ரைனில் தவிக்கும் சாத்தான்குளம் மாணவர்களை மீட்க கோரிக்கை
உக்ரைனில் சிக்கி தவிக்கும் சாத்தான்குளம் மாணவர்களை மீட்டு தரக்கேரி அவர்களது உறவினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் சாம் கில்டன். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் பிளஸ்சிங் கடந்த 4 மாதமாக அங்கு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். சாம் கில்டன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் உக்ரைன், ரஷியாவுக்கு இடையே போர் மூண்டுள்ளதால், அவரும், பிளஸ்சிங்கும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து சாம்கில்டன், பிளஸ்சிங் ஆகியோரை பத்திரமாக மீட்டு தரக்கோரி அவர்களது பெற்றோர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story