திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிக்கப்போவது யார்?


திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிக்கப்போவது யார்?
x
தினத்தந்தி 25 Feb 2022 10:55 PM IST (Updated: 25 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிக்கப்போவது யார்? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திட்டச்சேரி:
சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிக்கப்போவது யார்? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திட்டச்சேரி பேரூராட்சி
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், திட்டச்சேரி, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடந்தது.  இதை தொடர்ந்து 22-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி தலா 1 வார்டிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதை தொடர்ந்்து பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 
அதிக இடங்களில் சுயேச்சைகள் வெற்றி
தி.மு.க., அ.தி.மு.க.வை விட சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் திட்டச்சேரி பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை பிடிக்க போவது யார்? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றன. 
கீழ்வேளூர், வேளாங்கண்ணி பேரூராட்சிகளை தி.மு.க.வும், தலைஞாயிறு பேரூராட்சியை அ.தி.மு.கவும் கைப்பற்றி உள்ளது.   
தலைவர், துணை தலைவர் பதவி யாருக்கு?
திட்டச்சேரி பேரூராட்சியில் சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளதால் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை பிடிக்க போவது யார் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.  இதற்கான விடை வருகிற 4-ந்தேதி தெரியும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story