60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 25 Feb 2022 11:04 PM IST (Updated: 25 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட  உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலியோ சொட்டுமருந்து
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. 
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாம்களில், நகர்புறங்களில் 12,424 பேருக்கும் மற்றும் கிராமபுறங்களில் 48,429 பேருக்கும் மொத்தம் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
1,895 பணியாளர்கள்
போலியோ சொட்டு மருந்து வழங்கும், ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் முறையே பதிவு செய்தல், சொட்டு மருந்து வழங்குதல், இடது கை சுண்டுவிரலில் அடையாள மையிடுதல், குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வருதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.    
  இதில் பொது சுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 1,895 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 6 நடமாடும் வாகனங்கள்
மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 6 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், நாகை மற்றும் வேதாரண்யம் நகராட்சி பஸ் நிலையங்களிலும், நாகை ரெயில் நிலையத்திலும் 24 மணி நேரமும் நாளை மற்றும் நாளை மறுநாள், அடுத்த மாதம்(மார்ச்) 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
வீடு, வீடாக சென்று...
அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்களில் குழந்தைகளுக்கும்  சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.  விடுபட்ட குழந்தைகளுக்கு நாளை மறுநாள் மற்றும் 3-ந்தேதி களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Next Story