தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Feb 2022 11:04 PM IST (Updated: 25 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த தினத்தந்தி புகார் பெட்டி

சேதமான மின்கம்பம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி ஆயுதப்படை மைதானத்துக்கு அருகில் மின்கம்பம் ஒன்று சேதமாகி உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. இதுபற்றி மின்வாரியத்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மின்கம்பம் எப்போது உடைந்து விழும் என்றே தெரியவில்லை. சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.

  -துைரராஜ், பாச்சல்.

வட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ்பேட்டையில் 8-ம் நம்பர் ரேஷன்கடையில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான சலுைகயாக முதிேயார், மாற்றுத்திறனாளிகள், பல்ேவறு வகையான பொருட்கள் ெபற இயலாதோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவரவருக்கு பதிலாக மாற்றுப்பயனாளி பொருட்களை ெபற்றுக்கொள்ளலாம் எனக் கூறி விண்ணப்பம் பெறப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது. கையெழுத்துப் பெற்ற விண்ணப்பங்களை வட்ட வழங்கல் அதிகாரியிடம் கொண்டு சென்று சேர்க்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் ரேஷன் பொருட்கள் கிடைக்க பெறாமல் பலர் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -லட்சுமிநரசிம்மன், குடியாத்தம்.

 குப்பைக்காடாக மாறும் சத்துவாச்சாரி

  வேலூர் சத்துவாச்சாரியில் முருகன் கோவில் எதிரில் உள்ள தோப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் கோவில்களின் நடுப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதி முழுவதும் குப்பைக்காடாக மாறிவருகிறது. அங்கு குப்பைகளை தேக்கி வைக்காமல் அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகன்குமாரமங்கலம், வேலூர்.

சேதமான தார் சாலை

  ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட மேட்டுசக்கரகுப்பத்ைத திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் கிராம சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது. சமீபத்தில் தார் சாலை அமைத்தார்கள். அதில் குடிநீர் பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். இதனால் அந்தச் சாலை சேதமாகி உள்ளது. சேதமான சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
  -கண்ணன், ஜோலார்ேபட்டை.

சுகாதார வளாகத்தை சீர் செய்ய வேண்டும்

  ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் ‘புளூ கவுஸ்’ என்ற சுகாதார வளாகம் உள்ளது. அந்தச் சுகாதார வளாகத்துக்கு 6 மாதமாக சரியான முறையில் தண்ணீர் வரவில்லை. கதவுகள் சேதமாகி உள்ளது. மின் மோட்டார் பழுதாகி உள்ளது. பயனற்றுக் கிடக்கும் சுகாதார வளாகத்தைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
  -கே.முத்து, காரை.

சாலையோரம் ஆக்கிரமிப்புகள்

  காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து தனபாக்கியம் கல்யாண மண்டபம் வரை சாலை 70 அடி அகலம் கொண்டதாக இருந்தது. தற்போது இருபுறமும் சாலையை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற முன்வேண்டும்.
  -ராஜா, காட்பாடி.

அரசு பஸ்சை மீண்டும் இயக்குவார்களா?

  வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சுகொண்டாபுரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு தடம் எண்:25ஏ என்ற பஸ் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இயக்கப்படவில்லை. அந்தப் பஸ் பழைய பஸ் நிலையத்தில் மதியம் 1.05 மணிக்கும், மாலை 3 மணிக்கும் புறப்பட்டு அடுக்கம்பாறை, நெல்வாய், கணியம்பாடி, கனிகனியான், பாலாத்துவண்ணன், சின்னபாலம்பாக்கம், கீழ்அரசம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம் வரை சென்று திரும்பும். அந்தப் பஸ் இயக்கப்படாததால் மக்கள் அனைவரும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
  -டி.மணிவண்ணன், நஞ்சுகொண்டாபுரம்.

தெரு மட்டத்தை விட உயரமாக இருக்கும் கால்வாய் சுவர்

  காட்பாடி வி.ஐ.டி. ரோடு முத்தமிழ் நகர் 1-வது மெயின்ரோட்டில் உள்ள தெரு கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் தெரு மட்டத்ைத விட 2½ அடிக்கு மேல் உயரமாக கால்வாய் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மெயின்ரோட்டில் இருந்து தெருவுக்கு வர மக்கள் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் ெசல்ல முடியவில்லை. பொதுமக்களும் கால்வாய் சுவரை சிரமப்பட்டு தாண்டி நடந்து வருகிறார்கள். கழிவுநீர் கால்வாய் சுவரையொட்டி தெருவுக்கு ெசல்ல சாய்வுதளமாக அமைத்துத்தர ேவண்டும்.
  -பி.ராஜராஜன், காட்பாடி.
  

Next Story