ரூ.17 லட்சம் கடன் வாங்கிய தலைமை ஆசிரியர் தலைமறைவு


ரூ.17 லட்சம் கடன் வாங்கிய தலைமை ஆசிரியர் தலைமறைவு
x
தினத்தந்தி 25 Feb 2022 11:06 PM IST (Updated: 25 Feb 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

ரூ.17 லட்சம் கடன் வாங்கிய தலைமை ஆசிரியர் தலைமறைவானார். இதுசம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் செய்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வேப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 37). இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் சரவணகுமார் தேவரிஷிகுப்பம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு சிலரிடம் கடன் வாங்குவதற்காக எனது கணவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து எனது கணவரிடம் கையெழுத்து வாங்கி உள்ளனர். அதன் பிறகு தலைமை ஆசிரியர் ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளார். 

அவர் அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் எனது கணவரை தொந்தரவு செய்கின்றனர். தற்போது தலைமையாசிரியர் தலைமறைவாகிவிட்டார். இதனால் கடன் கொடுத்தவர்கள் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story