வேலூர் சைதாப்பேட்டையில் சர்ச்சைக்குரிய இடத்தில் 3-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு


வேலூர் சைதாப்பேட்டையில் சர்ச்சைக்குரிய இடத்தில் 3-வது நாளாக போலீஸ்  பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 11:06 PM IST (Updated: 25 Feb 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சைதாப்பேட்டையில் சர்ச்சைக்குரிய இடத்தில் 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் சர்ச்சைக்குரிய இடத்தில் 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

வேலூர் சைதாப்பேட்டை வாணியர் வீதி சர்க்கார் மண்டித்தெருவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் அங்கு அதிகளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இருதரப்பினரும் அங்கு கூட போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவ இடத்தில் போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று 3-வது நாளாக ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கமிஷனரிடம் மனு

இந்தநிலையில் நேற்று வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். 
அந்த மனுவில், சைதாப்பேட்டையில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக மதமோதல் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடம் யார் பெயரில் உள்ளது?, வரிகள் யார் பெயரில் கட்டப்பட்டுள்ளது?, குடியிருப்பு பகுதியா? அல்லது வணிக வளாகமா? போன்ற விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.


Next Story