ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:07 PM IST (Updated: 25 Feb 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை, 
 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெறுவதை கண்டித்தும், கொரோனா காலத் தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித் துள்ள நிலையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக ஒதுக்கி இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், நியாயமான கோரிக்கைக்காக போராடிய ஆசிரியர்களை அவதூறாக பேசி கைது நடவடிக்கைக்கு தூண்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்தும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக கலந்தாய்வு நடைபெறும் சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித் தம்பி முன்னிலை வகித்தார். 
மாவட்ட செயலாளர் முத்துப் பாண்டியன், மாநில துணைத்தலைவர் ஆரோக்கிய ராஜ், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஷ், ஜெயக்குமார், சிங்கராயர், கல்வி மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story