வாகனம் மோதி முதியவர்


வாகனம் மோதி முதியவர்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:11 PM IST (Updated: 25 Feb 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே எஸ். வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி (வயது70). இவர் நேற்று ராமநாதபுரம் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பூப்பாண்டியபுரம் கிராமம் அருகே சாலையோரம் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த தகவலின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story