திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை பா.ம.க.வினர் முற்றுகை


திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை பா.ம.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 25 Feb 2022 11:13 PM IST (Updated: 25 Feb 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனா்.

திண்டிவனம், 

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் அகற்றப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்தை மீண்டும், அதே இடத்தில் வைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தலைமையில் பா.ம.க.வினர் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த கல்லூரிக்கு இடம் கொடுத்த கோவிந்தசாமி உருவப்படத்தை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றக்கூடாது. மேலும் கோவிந்தசாமி உருவச்சிலை செய்யப்பட்டு கடந்த 3 வருடமாக முதல்வர் அறையில் கோணிப்பையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நிறுவ வேண்டும் என்றனர். அப்போது மாநில துணை தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ், திண்டிவனம் நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், சமூக நீதிப் பேரவை செயலாளர் வக்கீல் பாலாஜி, நல்லாவூர் சிவகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சிலம்பரசன், கிளியனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story