தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 25 Feb 2022 11:16 PM IST (Updated: 25 Feb 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரத்தில் பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மாணவிகள் தங்கும் விடுதி அருகே வடகாடு-புளிச்சங்காடு நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. . இதனால் சாலை ஓரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்து சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை.

மின்கம்பியில் முளைத்துள்ள செடிகள்
கரூர் மாவட்டம், வைரமடை மொஞ்சனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு மின்கம்பியில் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மின்கம்பியில் வளர்ந்து வரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகு, கரூர். 

கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம்
கரூர் மாவட்டம்  புகளூர் வள்ளுவர்நகர் அருகே சர்வீஸ் சாலை ஓரத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது சாக்கடை கழிவு நீர் கால்வாய் வெட்டப்பட்டது. இருப்பினும் சாக்கடை கழிவுநீர் வெளியில் செல்லாதவாறு சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக அப்பகுதியில் சாக்கடைகழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செல்வம் , புகழூர். கரூர்.

பழுதடைந்த சாலை
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையத்தில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் கான்கிரீட் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்துள்ளது . மேலும் சாலையின் இரு புறமும் ஏராளமான செடிகள் முளைத்து உள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த காங்கிரீட் சாலையை சீரமைத்தும், இருபுறமும் முளைத்துஉள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணசேகரன், மரவாபாளையம், கரூர்.

பூங்கா திறக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், காஜாப்பேட்டை மெயின் ரோட்டில் ரெங்கசாமி பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பயன்பாடற்ற நிலையில் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பூங்காவை திறக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
ஆபேல் குணசீலன் , அரியமங்கலம், திருச்சி.

Next Story