கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:35 PM IST (Updated: 25 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என போலீசாருக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இந்த மாதத்தில் (பிப்ரவரி) நடந்த குற்ற சம்பவங்கள் குறித்தும், சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

தடுப்பு கட்டைகள்

அப்போது தச்சூர், வாசுதேவனூர் கூட்டுரோடு, பூண்டிரோடு ஆகிய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் அமைத்து சாலை விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் வருங்காலங்களில் சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்க சாலைகளில் தேவையான இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். தற்காலிக வேகத்தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள் அமைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன், தாசில்தார்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story