விருதுநகருக்கு சரக்கு ரெயிலில் வந்த அரிசி, கோதுமை மூடைகள்
10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூரில் இருந்து காரைக்குடி வழியாக சரக்கு ரெயிலில் அரிசி, கோதுமை மூடைகள் கொண்டு வரப்பட்டன.
விருதுநகர்,
10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூரில் இருந்து காரைக்குடி வழியாக சரக்கு ரெயிலில் அரிசி, கோதுமை மூடைகள் கொண்டு வரப்பட்டன.
சரக்கு ெரயில்
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ெரயில் பாதை அமைக்கப்பட்ட பின்பு முதன் முதலாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அரிசி, கோதுமை மூடைகளுடன் சரக்கு ெரயில் விருதுநகருக்கு இயக்கப்பட்டது. அதாவது, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இந்த ெரயில் விருதுநகர் வந்தடைந்தது.
இதற்கு முன்பு இவ்வாறு கோதுமை, அரிசி கொண்டு வரப்படும் ரெயிலானது திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது காரைக்குடி வழியாக இந்த ெரயில் இயக்கப்படுவதால் பயண தூரம் 31 கிலோ மீட்டர் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரிசி மூடைகள்
திருவாரூரில் இருந்து 21 சரக்கு ெரயில் பெட்டிகளில் அரிசி மூடைகள் அனுப்பப்பட்டது. இந்த அரிசி மூடைகள் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கும், அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சி கோட்ட ெரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் கட்டணமாக செலுத்தி உள்ளது. இந்த சரக்கு ெரயில் விருதுநகர் வந்தடைந்த பின்பு ெரயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூடைகளை இறக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ெரயிலில் வந்த கோதுமை மூடைகளும் இறக்கப்பட்டன.
Related Tags :
Next Story