உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும்
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர வேண்டும் என்று திருச்சி மாணவரின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளிடம் டோல்கேட், பிப்.26-
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர வேண்டும் என்று திருச்சி மாணவரின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாணவர்
திருச்சி நெ.1 டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த சேவியர்-மேகலா தம்பதியின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (வயது 23). இவர் உக்ரைனில் பி.இ. இறுதியாண்டு படித்துவருகிறார். தற்போது, உக்ரைனில் ரஷியா போர் தொடுத்துள்ளதால், அவர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்.
இது குறித்து மாணவரின் தாய் மேகலா கூறியதாவது:-
எனது மகனுக்கு படிப்பு முடிவதற்கு இன்னும் 3 மாதமே உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரினால் எனது மகன் உள்பட அங்கு படித்து வரும் மாணவர்கள் மற்றும் தொழிலுக்காக சென்ற தமிழர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உணவின்றி தவிப்பு
எனது மகனும், அவனது நண்பர்களும் போதிய உணவு இன்றி அங்கு சிக்கி தவித்து வருவதை தொலைபேசியின் வாயிலாக அறிந்ததில் இருந்து எனக்கு உணவு அருந்த மனம் இல்லை.
உக்ரைனில் இருந்து தமிழகம் வருவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.87 ஆயிரம் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களால் பணம் அனுப்புவது என்பது இயலாத காரியம் என எண்ணிய வேளையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப ஆகும் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்த்ததைப்போல் இருந்தது.
நன்றி
இதற்காக அவருக்கு அனைத்து பெற்றோர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் என் மகன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களையும் மீட்டு பாதுகாப்புடன் அவரவர் பெற்றோர்களிடம் கொண்டுவந்து சேர்க்க மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story