பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறைந்து வரும் தண்ணீர்
பெரியகுளம் கண்மாயில் வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
பெரியகுளம் கண்மாயில் வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை நம்பி 900-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயிகள் தென்னை, நெல் உள்ளிட்ட சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் முதல்போக நெல் அறுவடையை முடித்து கோடை கால நெல் சாகுபடி செய்து விவசாயிகள் விவசாய பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடைமழை இன்னும் தொடங்காத சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.
கிணற்று பாசனம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையால் போதிய அளவு நீர் நிலைகளிலும், கண்மாய்களிலும் தண்ணீர் உள்ளது. இதனால் முதல் போக அறுவடையை முடித்து விட்டு தற்போது கோடைகால நெல் நடவை ஆரம்பித்து உள்ளோம்.
கிணறுகளில் ஓரளவு தண்ணீர் உள்ளதால் நெல் நாற்று நடவு பணியை தொடங்கியுள்ளோம். கோடைகால பருவமழை தொடங்காததால் தற்போது விவசாய பணியினை கிணற்று பாசனம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். மேலும் கண்மாயில் தற்போது 40 முதல் 45 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் நடவு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
விவசாயிகள் வேதனை
மேலும் கடுமையான வெயில் காரணமாக கண்மாயில் நீர் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கோடை கால பருவமழை பெய்து நீர்நிலைகளிலும், கண்மாய்களிலும் தண்ணீர் வந்தால் மட்டுமே இந்த ஆண்டு கோடைகால நெல் அறுவடை பணியினை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story