மோட்டார் சைக்கிள்கள் மோதல்-தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்-தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 Feb 2022 2:14 AM IST (Updated: 26 Feb 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பலியானார்.

அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் முருகேசன் (வயது 30) கூலித் தொழிலாளியான இவரும், தாலம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் முரளிதரனும்(22) ஒரு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே உள்ள பணம்பட்டி பிரிவு சாலை என்னும் இடத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
 அப்போது எதிரே உருவம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவா (22), அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சரவணன் ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில், இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். 
தொழிலாளி பலி
 அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 பேரில் முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 விபத்தில் இறந்த முருகேசனுக்கு கடந்த ஆண்டு தான் திருமணமானது. கடந்த வாரம் அவரது மனைவிக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story