களக்காடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது


களக்காடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 2:23 AM IST (Updated: 26 Feb 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்

களக்காடு:
களக்காடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொந்தரவு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் களக்காட்டை சேர்ந்த முருகன் (வயது 54) என்பவர் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர் முருகன், 7-ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
ஆசிரியர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் முருகனிடம் இதுகுறித்து தட்டிக் கேட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக களக்காடு போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்றனர். ஆசிரியர் முருகனை பிடித்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்தனர்.

Next Story