நெல்லை கொக்கிரகுளத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


நெல்லை கொக்கிரகுளத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Feb 2022 2:45 AM IST (Updated: 26 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
நெல்லை கொக்கிரகுளத்தில் இளங்கோவடிகள் தெரு, சாலைத்தெரு, திருவள்ளுவர் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மாதமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் குடிஇருந்தும் சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை கொக்கிரகுளம் பெண்கள், ஊர் மக்கள் அங்குள்ள மெயின் ரோட்டில் திரண்டனர்.
சாலை மறியல்
காலிக்குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல மாதங்களாக குடிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது. எனவே எங்கள் பகுதி குடிநீர் பிரச்சினையை தெரிந்து நிரந்தர தீர்வு காணுவதற்கு கலெக்டர் நேரில் வர வேண்டும், அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி, ரோட்டை விட்டு அகல மறுத்தனர்.
இதை அறிந்த நெல்லை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் நெல்லை சந்திப்பு -மேலப்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
கலங்கலான தண்ணீர்
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் கலங்கலாக இருப்பதாக கூறி, பொதுமக்கள் சுகாதாரமான தண்ணீர் கொண்டு வருமாறு மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story