சேலம் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 17 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 15 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 7 பேர், ஓமலூர் மற்றும் வீரபாண்டியில் தலா 3 பேர், ஆத்தூர் மற்றும் பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 104 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு 318 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story