ஏற்காட்டில் கால்கள் முறிந்து சாலையோரம் படுத்து கிடந்த காட்டெருமை


ஏற்காட்டில் கால்கள் முறிந்து சாலையோரம் படுத்து கிடந்த காட்டெருமை
x
தினத்தந்தி 26 Feb 2022 3:06 AM IST (Updated: 26 Feb 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் கால்கள் முறிந்து சாலையோரம் காட்டெருமை படுத்து கிடந்தது.

ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள குப்பனூர் செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் அருகே நேற்று சாலையோரத்தில் காட்டெருமை ஒன்று 2 கால்கள் முறிந்த நிலையில் படுத்திருந்தது. அதாவது மலைமேல் இருந்து தவறி விழுந்ததில் 2 கால்களும் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பாப்பிரெட்டிப்பட்டி வனத்துறை அதிகாரி பரசுராமன், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் பாலாசந்திரன் ஆகியோர் காட்டெருமைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் காட்டெருமை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் நீண்ட நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story