தென்காசி: ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி:
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் மாநிலத்தின் கடைக்கோடியில் பணி செய்ய வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் முருகையா தலைமை தாங்கினார். கணினி பயிற்றுநர் முருகன், மாவட்ட பொறுப்பாளர் செல்வ சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். முடிவில் புல்லுக்கட்டுவலசை பள்ளி தலைமையாசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story