ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 5:36 PM IST (Updated: 26 Feb 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் சக்திதாசன் (வயது 18). 

செய்யாறில் ஐ.டி.ஐ படித்து வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி செய்யாறில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது சிறுங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (21) யுவராஜ் (26) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக பஸ்சில் ஏறி  சக்திதாசனை பஸ்சில் இருந்து இறக்கி, ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

 இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து அபினேஷ், யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். 

Next Story