மகளிர் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா
மகளிர் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா
திருவண்ணாமலை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் திருவண்ணாமலை அருகில் உள்ள வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி எதிரில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலை வகித்தார். மகளிர் குழுக்களின் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் ஜெயந்தி வரவேற்றார்.
இதில் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கலையரசி சிறுதானியங்களால் செய்யப்பட்ட பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி பேசினார்.
சுமார் 20 மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு சிறுதானியங்களால் செய்யப்பட்ட கேழ்வரகு அடை, கொழுகட்டை, பணியாரம், கொண்ைடகடலை, பச்சைபயிறு, சிமிலி உருண்டை, முறுக்கு, அதிரசம், வடை போன்ற உணவு வகைகள் காட்சிப்படுத்தினர்.
இதனை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story