நடமாடும் வாகனம் மூலம் உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை


நடமாடும் வாகனம் மூலம் உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 26 Feb 2022 7:31 PM IST (Updated: 26 Feb 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடமாடும் வாகனம் மூலம் உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி, தள்ளுவண்டி கடை, பழக்கடை போன்ற கடைகளில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், சரவணன் உள்ளிட்டோர் லேப் அனாலிஸ்ட் குழு நடமாடும் வாகனம் மூலம் விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் உணவில் கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

விழிப்புணர்வு

ஓட்டல்கள், பேக்கரி போன்ற இடங்களில் சரியான அளவில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என பரிசோதனை செய்தனர்.அதுபோல் அளவுக்கு அதிகமாக ஏதேனும் கலப்படம் இருந்தால் கடை உரிமையாளரிடம் அதுபற்றி கூறி, இதுதான் சரியான அளவு என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கி கூறினர்.
மேலும் தயாரிக்கப்படும் உணவுகளை நடமாடும் வாகனத்தில் எடுத்து வந்து லேப் அனாலிஸ்ட் மூலம் வாகனத்திலேயே உடனடியாக பரிசோதனை செய்து கடை உரிமையாளர்களிடம் உணவின் தரம், அளவு மற்றும் தன்மை குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.

Next Story