பொய் வழக்கு போடும் திமுகவை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்றுமுன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
பொய் வழக்கு போடும் திமுகவை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்
கோவை
பொய் வழக்கு போடும் தி.மு.க.வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை புறநகர், தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் இதய தெய்வம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு வழக்குப்போட்டு கைது செய்து உள்ளது.
கள்ள ஓட்டு போட வந்த 10-க்கும் மேற்பட்ட வழக்கு உள்ள ஒரு ரவுடியை பிடித்து கொடுத்த ஜெயக்குமாரை கைது செய்து உள்ளனர்.
வெற்றியை பறித்தனர்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் சிறப் பாக பணியாற்றினார்கள். இரட்டை இலைக்கு தான் வாக்களித்தோம் என்று மக்களே கூறினார்கள்.
இதன் மூலம் கோவை, திருப்பூர் மேயர் பதவியை பிடிக்க 100 சதவீத வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த வெற்றி யை தி.மு.க.வினர் தட்டிப்பறித்து முதுகில் குத்தி உள்ளனர்.
வி.வி.பேட் எந்திரம் வைக்காததால் ஏதோ தப்பு நடந்து உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
தேர்தல் ஆணையம், காவல்துறை போன்ற அரசு எந்திரம் தி.மு.க.வுடன் ஒன்று சேர்ந்து நமது வெற்றியை பறித்து உள்ளனர்.
பழி வாங்கும் எண்ணம்
ஜனநாயக ரீதியில் நாம் தான் வெற்றி பெற்று உள்ளோம். நம்மை வெல்ல யாரும் இல்லை.
இந்த கூட்டத்தை போட்டதன் நோக்கம். ஜெயக்குமார் மீது மட்டுமல்ல அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப்போட்டு வருகிறார்கள்.
தி.மு.க. பெற்றது செயற்கையான வெற்றி. வி.வி.பேட் எந்திரம் வைத்து இருந்தால் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்கும்.
வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் மீது வழக்குப்போட்டு உள்ளனர். எந்த வழக்குப்போட்டாலும் அ.தி.மு.க. அஞ்சாது. எங்களை ஜெயலலிதா உருவாக்கி உள்ளார்.
தி.மு.க.வுக்கு சென்றவர்களுக்கு மதிப்பு இல்லை. பொய் வழக்கு போடவேண்டாம்.
காவல்துறையினர் நடுநிலையோடு இருக்க வேண்டும். முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் கூட இவ்வளவு பழிவாங்கும் எண்ணம் இல்லை.
தி.மு.க.வை வீழ்த்துவோம்
ஜெயக்குமார் மீது மட்டும் வழக்கு போடவில்லை. அ.தி.மு.க.வினர் அனைவர் மீதும் வழக்கு போடுகிறார்கள்.
28-ந் தேதி (நாளை மறுநாள்) கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடக்கும் மாபெரும் ஆர்ப்பாட் டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பொய் வழக்கு போடும் தி.மு.க.வின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் வெற்றி பெற்று தி.மு.க.வை வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story