பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பேரூர்
பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலை
தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்ட வர் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் அடிவாரத்தில் இருந்து செங் குத்தாக உள்ள 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புலிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களில் மலை ஏறுவார்கள்.
ஒவ் வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதிக்கப்படுவார் கள்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
கட்டணம் வசூல்
நாளை (திங்கட்கிழமை) மகாசிவராத்திரி என்பதால் ஏராளமான பக் தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வருவார்கள். இதையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு பணிகளை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நேரில் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்பட வில்லை.
ஆனாலும் மலையேற பக் தர்கள் வருகின்றனர். அவர்களிடம் வனத்துறை சார்பில் ரூ.100 கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் அதற்கு ரசீது தருவது கொடுப்பது இல்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story