‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Feb 2022 8:31 PM IST (Updated: 26 Feb 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


சாலையில் அபாய பள்ளங்கள் 

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து விட்டது. மேலும் சாலையில் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக விவசாய நிலங்களில் இருந்து விளைபொருட்களை கொண்டு வரமுடியவில்லை. மேலும் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர்சாமி, தேவதானப்பட்டி.

வீணாகும் குடிநீர் 

செம்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலையில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் முன்பாக செல்லும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து குடிநீர் வெளியேறி ஓடை போன்று சாலையோரத்தில் வீணாக செல்கிறது. அதோடு குடிநீர் கசிவால் சாலை சேதம் அடைந்து வருகிறது. எனவே குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். -ராமு, செம்பட்டி.

சாலையில் அபாய வளைவு 

திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் வக்கம்பட்டியில் அபாய வளைவு உள்ளது. இந்த வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிக்குமார், செம்பட்டி.

குப்பை குவியல் 

தேனி அரண்மனைப்புதூரில் பெரியாறு பாலத்தின் அருகில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகிறது. பல நாட்களாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரம் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, அங்கு குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க வேண்டும். -முருகன், தேனி.

Next Story