100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வேளாங்கண்ணி:-
வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதி சுற்றுலா தலமாக விளங்குவதால் திரளான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
ரெயில் சேவை
வெளியூர்களில் இருந்து வருபவர்கள் நாகைக்கு வந்து, அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் மூலம் வர வேண்டும். சில நாட்கள் வாகனங்களுக்காக பக்தர்கள் காத்துக்கிடக்கும் நிலையும் இருந்தது.
இதனால் அந்த பகுதி பொதுமக்களும், பேராலய நிர்வாகமும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் வேளாங்கண்ணிக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகை-வேளாங்கண்ணி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
பராமரிப்பு பணி
இதுவரை நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து கடந்த மாதம் வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தென்னக ரெயில்வே கட்டுமான பணிகள் தலைமை பொறியாளர் தீபக்நாராயணகாட்டே தலைமையில் அதிகாரிகள் வேளாங்கண்ணிக்கு வந்து தண்டவாளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
100 கி.மீ வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
இதனைத்தொடர்ந்து நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 2 பெட்டிகள் அடங்கிய சோதனை ரெயிலை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனைக்கு பிறகு நாகையில் ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்த வழித்தடத்தில் ெரயில்களின் வேகத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்படும் என்றனர்.
இதில் ெரயில்வே துறை முதன்மை பொறியாளர் நாராயணன், துணைப் பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் சரவணமுத்து, ெரயில் நிலைய மேலாளர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story