முத்தம்பாளையம் வீட்டு வசதி திட்ட மனை, வீடுகள் விற்பனை வீட்டு வசதி வாரிய அதிகாரி தகவல்


முத்தம்பாளையம் வீட்டு வசதி திட்ட மனை, வீடுகள் விற்பனை வீட்டு வசதி வாரிய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2022 9:14 PM IST (Updated: 26 Feb 2022 9:14 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய மனைகள் மற்றும் வீடுகள் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை தொடங்கி இருப்பதாக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய மனைகள் மற்றும் வீடுகள் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை தொடங்கி இருப்பதாக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
முன்னுரிமை
ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு வீட்டு வசதி பிரிவுக்கு உள்பட்ட முத்தம்பாளையம் வீட்டு வசதி திட்டங்களில் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 20-12-2021 -ல் அறிவிக்கப்பட்டது மற்றும் புதிதாக விற்பனைக்காக சேர்க்கப்பட்ட மனைகள், வீடுகள், குடியிருப்புகள் குறித்த விவரங்கள், விலை உள்ளிட்ட விவரங்கள் www.tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஈரோடு சம்பத்நகர் தமிழ்நாடு வீட்டு வசதி அலுவலகத்தில் தகவல் பலகையில் விவரங்கள் ஒட்டப்படும்.
கிரையப்பத்திரம்
இதை பார்த்து பொதுமக்கள் தாங்கள் விரும்பிய மனை அல்லது வீட்டினை உடனடியாக முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இதுபோல் ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 5 மற்றும் 5ஏ திட்டப்பகுதிகளில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு இறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே முத்தம்பாளையம் பகுதி 5 மற்றும் 5ஏ திட்டப்பகுதிகளில் இதுவரை கிரையப்பத்திரம் வாங்காதவர்கள் தங்களுக்கு உரிய நிலுவைத்தொகையை தெரிந்து, தொகையை செலுத்தி கிரைய பத்திரங்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு ஈரோடு சம்பத்நகரில் உள்ள வீட்டு வசதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story