மடத்துக்குளம் அருகே போலீசார் வாகன சோதனையில் 666 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


மடத்துக்குளம் அருகே போலீசார் வாகன சோதனையில் 666 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Feb 2022 9:25 PM IST (Updated: 26 Feb 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே போலீசார் வாகன சோதனையில் 666 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே போலீசார் வாகன சோதனையில் 666 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காரும்,சரக்கு வாகனமும் சிக்கின.    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 புகையிலை பொருட்கள்
  தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை பகுதியை சேர்ந்தவர் அமலபட்டு ராஜா (வயது36), அந்தோணி ஞானபிரதீஷ் (22). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள கணபதி பகுதியில் தங்கியுள்ளனர். 
இவர்கள் புகையிலை பொருட்களை பல இடங்களுக்கும் எடுத்துச்சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று கோவையிலிருந்து உடுமலை பகுதிக்கு சரக்கு வாகனத்தில் 666  கிலோ புகையிலை பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தனர். இதில் ஒருவர் சரக்கு வாகனத்திற்கு முன்பு உளவு பார்க்க காரை ஓட்டி வந்தார். ஒரு வாகனத்திற்கும், இன்னொரு வாகனத்திற்கும் ஒரு கிலோமீட்டர் இடைவெளி விட்டு வந்தனர்.
2 பேர் கைது 
வழியில் வாகன சோதனை நடந்தால் முன்னால் வரும் காரில் இருப்பவர் பின்னால் வாகனத்தை ஓட்டி வருபவருக்கு போனில் தகவல் சொல்வார் உடனடியாக தப்பித்துச்செல்வது என்ற திட்டத்தில் இருவரும் வந்தனர். 
ஆனால், ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திட்டம் போலீசாருக்கு முன்பே தெரிந்து விட்டது. இதனால் சரியாக திட்டமிட்டு 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்தனர். 666 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார், சரக்கு வாகனம் மடத்துக்குளம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story