சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் திருநீறுமஞ்சள் குங்குமம் வைத்து


சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் திருநீறுமஞ்சள் குங்குமம் வைத்து
x
தினத்தந்தி 26 Feb 2022 9:27 PM IST (Updated: 26 Feb 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் திருநீறுமஞ்சள் குங்குமம் வைத்து

காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் திருநீறு, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாகும்.  முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். அந்த உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். பக்தர் கூறியது சரிதானா என்று கோவிலில் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
திருநீறு, மஞ்சள், குங்குமம்
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு தினமும் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
இந்நிலையில் கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி (வயது 35) என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான திருநீறு, மஞ்சள், குங்குமம் ஆகிய பொருட்கள் நேற்று  முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் ஜனவரி 29-ந்தேதி முதல் தண்ணீர், சிவலிங்கம், சின்னசங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
சுப காரியங்கள்
இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறுகையில், ‘தற்போது திருநீறு, மஞ்சள், குங்குமம் ஆகிய பொருட்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவதால் வரும் காலங்களில் மங்களகரமான சுப காரியங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் இதனுடைய நன்மைகள், தீமைகள் வரும் காலங்களில் தெரியும்’ என்றனர்.

Next Story