திருப்பூரில் அரசு டவுன் பஸ்சில் கர்ப்பிணி ஏறுவதற்குள் பஸ் புறப்பட்டு விட்டதாக கூறி உறவினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் அரசு டவுன் பஸ்சில் கர்ப்பிணி ஏறுவதற்குள் பஸ் புறப்பட்டு விட்டதாக கூறி உறவினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூரில் அரசு டவுன் பஸ்சில் கர்ப்பிணி ஏறுவதற்குள் பஸ் புறப்பட்டு விட்டதாக கூறி உறவினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சமீமா பர்வின் (வயது 24).கர்ப்பிணியான இவர் நேற்று மதியம் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அரசு பஸ்சில் ஏறி வந்தார். திருப்பூர் அவினாசி ரோட்டில் எஸ்.ஏ.பி. பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கினார்.
பின்னர் அங்கிருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக அந்த வழியாக வந்த தடம் எண் 101-ம் அரசு டவுன்பஸ்சில் சமீமா பர்வின் ஏற முயன்றுள்ளார். அதற்குள் கண்டக்டர் விசிலடிக்க டிரைவர் பஸ்சை கிளப்பி வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக சமீமா பர்வின் கீழே விழாமல் இறங்கி விட்டார். பின்னர் இதுகுறித்து தனது உறவினரிடம் தெரிவிக்க அவர்கள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குள் சமீமா பர்வின் ஆட்டோவில் புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வந்தார்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சம்பந்தப்பட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவரிடம் சமீமா பர்வின் மற்றும் உறவினர்கள், கர்ப்பிணி என்றும் பார்காமல் அவர் பஸ்சில் ஏறுவதற்குள் கிளப்பி வந்தது குறித்து வாக்குவாதம் செய்தனர். மகளிருக்கு இலவச பயணம் என்பதால் டிரைவர், கண்டக்டர் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், பஸ்சில் ஏறாததால் அங்கிருந்து கிளம்பி வந்ததாக கூறினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சமாதானம் அடைந்து அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் பழைய பஸ் நிலையம் முன் நேற்று மாலை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Related Tags :
Next Story