திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது


திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது
x
தினத்தந்தி 26 Feb 2022 9:33 PM IST (Updated: 26 Feb 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது

திருப்பூர்,
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை அடியோடு சரிந்துள்ளது.  சுரைக்காய் கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து அதிகரிப்பு
திருப்பூர்  தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டானது மாநகரின் பிரதான மார்க்கெட்டாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த மார்க்கெட்டிற்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், தாராபுரம், சேவூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அனைத்து வகை காய்கறிகளும் சுமார் 5 முதல் 10 டன் வரை வந்த நிலையில் தற்போது சுமார் 40 டன் வரை காய்கறிகள் வருகின்றன.
இதன்காரணமாக தற்போது காய்கறிகளின் விலை அடியோடு குறைந்துள்ளது. மொத்த விலையாக 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் மூட்டை ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 27 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 முதல் ரூ.250-க்கும், 50 கிலோ முட்டை கோஸ் மூட்டை ரூ.500-க்கும், 30 கிலோ பீட்ரூட் மூட்டை ரூ.200 முதல் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  12 கிலோ எடை கொண்ட பீர்க்கங்காய் மூட்டை ரூ.150 முதல் ரூ.200-க்கும், 20 கிலோ பாகற்காய் மூட்டை ரூ.350 முதல் ரூ.400-க்கும், 18 கிலோ அவரை ரூ.350-க்கும், 45 கிலோ உருளைகிழங்கு மூட்டை ரூ.900 முதல் ரூ.1200-க்கும், 25 கிலோ சின்னவெங்காயம் மூட்டை ரூ.500 முதல் ரூ.650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சில்லறை விலையாக ெபரிய வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.38-க்கும், வெண்டைக்காய் ரூ.30, கேரட் ரூ.60 முதல் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூரில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரத்தில் காய்கறிகள் அதன் தரத்திற்கு தகுந்தாவாறு விலையில் மாற்றம் மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story