குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு


குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 26 Feb 2022 9:57 PM IST (Updated: 26 Feb 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகளை வழங்கினார்.

திண்டுக்கல்:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவு சார்பில், திண்டுக்கல் மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 குழுக்கள் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக குறும்படம் எடுத்து காண்பித்தனர். அதில் சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதையடுத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story