ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து அதிகரிப்பு


ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து அதிகரிப்பு
x
ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து அதிகரிப்பு
தினத்தந்தி 26 Feb 2022 9:59 PM IST (Updated: 26 Feb 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கிடையில் தென்னைக்கு ஊடுபயிராக கோகோ, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தற்போது ஊடுபயிராக பாக்கு சாகுபடி  அதிகரித்து உள்ளது. 

இதன் காரணமாக இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட பாக்குகளை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட  வளாகத்தில் விவசாயிகள் கொண்டு வந்து  காய வைத்து உள்ளனர். 


இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் தான் விவசாயிகள் அதிகமாக பாக்கு சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆனைமலை பகுதியிலும் பாக்கு சாகுபடி அதிகரித்து உள்ளது. 

ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பெரிய அளவில் செலவு இல்லை. மேலும் பாக்கு சாகுபடியால் உபரி வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டை விட பாக்கு விலை அதிகரித்து உள்ளது.

இந்த ஆண்டு சாகுபடி அதிகரித்து உள்ளதால் வரத்தும் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ.40 முதல் ரூ.45-க்கும், காய்ந்தது கிலோவுக்கு ரூ-.130 முதல் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இங்கிருந்து கேரளாவுக்கு அதிகளவு பாக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 


இந்த ஆண்டு பச்சை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரையும், காய்ந்தது ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனை ஆகிறது. பாக்கை உலர வைக்க ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 உலர்கலன்கள் உள்ளன. மேலும் 1700 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் உள்ளன. இங்கு பாக்கு இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

மேலும் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் பாக்கை ஒரு நாளைக்கு 10 பைசா வாடகையில் வைத்து கொள்ளலாம். முதல் 15 நாட்களுக்கு வாடகை செலுத்த வேண்டியது இல்லை. கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளது. எனவே விவசாயிகள் பாக்கை இருப்பு வைத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story