கடலில் மூழ்கி வாலிபர் சாவு
திருச்செந்தூரில் கடலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருச்செந்தூர்:
கோவை சர்க்கார் சாமக்குளம் பாலாஜிநகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் காந்திநகரில் உள்ள தியேட்டர் கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி வேலைக்கு சென்ற ராஜ்குமார் வீடு திரும்பவில்லை. பின்னர் ராஜ்குமார் தனது செல்போன் மூலம் அவரது தாயாரிடம் பேசினார். அப்போது திருச்செந்தூருக்கு சென்று இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கோவில் கடலில் குளித்துக் கொண்டு இருந்தபோது ராஜ்குமார் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story