பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-கலெக்டரிடம் கோரிக்கை


பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2022 10:51 PM IST (Updated: 26 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகங்கை,

பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோரிடம் ேகாரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.இதனால் இந்த பகுதியில் விளையும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக பூவந்தியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


Next Story