11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 650 டன் நெல் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி 11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
திருவாரூர்;
உரிய ஆவணங்கள் இன்றி 11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
லாரி டிரைவர்களிடம் விசாரணை
வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்து டெல்டா மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் எடைமேடை பகுதியில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது நெல் மூட்டைகள் ஏற்றி செல்ல உரிய ஆவணம் உள்ளதா என லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
குழு அமைப்பு
வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளின் நெல் இங்கு விற்பனைக்கு வருவதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நெல்லை கொண்டு செல்லும்போது தேவையான விவரங்கள் அடங்கிய புதிய படிவம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தை அவசியம் லாரி டிரைவர்கள் வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் ஆய்வாளர்கள் லாரி உரிமையார்கள், கொள்முதல் செய்பவர்களிடமும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்
எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நெல் மூட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப்படும். இதுவரை உரிய ஆவணமின்றி 11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கல்பனா
திருவாரூர் உணவு பொருள் வழங்கல் துறை சிறப்பு வருவாய் அலுவலர் மனோகரன் ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story