திருச்சி விமானநிலையத்தில் 2 பேர் கைது
திருச்சி விமானநிலையத்தில் 2 பேர் கைது
செம்பட்டு,பிப்.27-
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கறம்பக்குடி பரங்கிப்ேபட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31) என்பவர் கறம்பக்குடி போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கறம்பக்குடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (33) என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் எமனேஸ்வரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story