வாழைகள் சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழை மரங்களை மான்கள் சேதப்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயியான இவர் செண்பகத்தோப்பு சாலையில் தோட்டம் வைத்துள்ளார். இதில் 1,500-க்கும் மேற்பட்ட வாழை கன்றுகளை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்திற்கு வந்த மான்கள் 500-க்கும் மேற்பட்ட மரம் மற்றும் கன்றுகளை சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து முத்து கிருஷ்ணன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரி பாரதி மற்றும் வனத்துறையினர் தோட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயி முத்து கிருஷ்ணன் கூறுகையில், விவசாயம் செய்யவே சிரமமான இந்த நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். தற்போது மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து வாழைக்கன்று மற்றும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் கவலையில் உள்ளோம். எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story