வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள்- ரூ.22 ஆயிரம் கொள்ளை
பாபநாசத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்:-
பாபநாசத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பூட்டு உடைப்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது32) இவர் தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மன்னார்குடியில் தன்னுடைய உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நெக்லஸ், தோடு, வளையல், செயின், மோதிரம், கைச்செயின், டாலர், 8 கிராம் காயின் உள்பட மொத்தம் 10 பவுன் நகைகள், ரூ.22 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், முத்துக்குமார் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் சங்கவி வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சோதனை செய்தார்.
இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளைடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story