ரூ.8.14 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க பெண் செயலாளர் கைது


ரூ.8.14 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க பெண் செயலாளர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2022 2:34 AM IST (Updated: 27 Feb 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.8.14 லட்சம் கையாடல் புகார் தொடர்பாக பெண் செயலாளரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை:
அம்பை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.8.14 லட்சம் கையாடல் புகார் தொடர்பாக பெண் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு சங்கம்
நெல்லை டவுன் ஆசாத் நகரை சேர்ந்தவர் செய்யது உசேன். இவருடைய மனைவி ஆயிஷா பானு (வயது 54).
இவர் அம்பை அருகே உள்ள ஆலடியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார்.
கையாடல்
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலி ஆவணங்கள் தயாரித்தும், உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டும், போலி ரசீது போட்டும் ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 650 கையாடல் செய்ததாக சேரன்மாதேவி கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துசாமி நெல்லை மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
கைது
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பவளச்செல்வி ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆயிஷா பானுவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story