சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 8½ கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 8½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்
சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் ஆலப்புழா சென்ற சிறப்பு ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் மீரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
முன்பதிவு செய்யப்பட்ட எஸ்- 8 மற்றும் டி-1 ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தபோது 2 கைப்பைகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை போலீசார் சோதனை செய்தபோது ஒரு பையில் 4.6 கிலோ கஞ்சாவும், மற்றொரு பையில் 4 கிலோ கஞ்சாவும் பண்டல்களாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ரெயில் பெட்டியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இரண்டு பைகளையும் கொண்டு வந்தது யார்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் 8 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story