மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்: 4 வயது சிறுமி பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்: 4 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 27 Feb 2022 10:34 AM IST (Updated: 27 Feb 2022 10:34 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் 4 வயது சிறுமி பலி

அம்பை:
அம்பை ரகுமான் காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா. இவரது 4 வயது மகள் அபர்ணா.
நேற்று இரவு ராஜா, மகள் அபர்ணாவுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஒரு திருப்பத்தில் நின்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தனது காரினை பின்னோக்கி இயக்கிய போது எதிர்பாராதவிதமாக ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுமி அபர்ணா கீழே விழுந்தபோது கார் அவள் மீது ஏறி இறங்கி விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவள் இறந்தாள். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story