உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவ, மாணவிகளை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவ, மாணவிகளை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை
கடையநல்லூர்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நேற்று 3-வது நாளாகவும் நீடித்தது.
கடையநல்லூரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். கடையநல்லூர் நடுஅய்யாபுரம் தெருவைச் சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், அட்டைகுளம் தெருவைச் சேர்ந்த அஹ்மது அலீ-பாத்துமுத்து ஜுகைரா தம்பதியர் மகள் சல்வா அப்ரீன், நடுஅய்யாபுரம் தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் ஜியாத், அதே தெருவைச் சேர்ந்த அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், நடுஅய்யாபுரம் தெருவைச் சேர்ந்த முகமது கனி மகன் முகம்மது நதீம், அட்டைகுளம் சின்ன தெருவை சேர்ந்த சேக் உதுமான் மகன் கன்ஸுல்லாஹ் உள்ளிட்டவர்களும் அங்குள்ளனர். அங்குள்ள கல்லூரியில் இவர்கள் படித்து வருகிறார்கள்.
உக்ரைனில் படிக்கும் தங்கள் மகன்-மகள்களை மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story