போலியோ சொட்டு மருந்து முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 777 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 777 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
போலியோ சொட்டு மருந்து
நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
இது தவிர மாவட்ட மற்றும் மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 777 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் 40 அயிரத்து 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
முகாம்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். ஒரு முகாமுக்கு 4 பேர் வீதம் 3 ஆயிரத்து 203 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடந்தது. மலைவாழ் மக்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு கொண்டனர்.
இந்த பணியை கலெக்டர் அம்ரித், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தற்போது போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ளாத குழந்தைகளை கண்டறிந்து, அடுத்த 2 நாட்களில் வீடு, வீடாக சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story