சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா


சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 27 Feb 2022 7:04 PM IST (Updated: 27 Feb 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

மகா சிவராத்திரி

மாதந்தோறும் பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று இரவு முழுவதும் தரிசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2 ஆண்டுகளாக மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

உச்சிகால தீபாராதனை

கூடலூர் பகுதியில் நம்பாலக்கோட்டை சிவன் மலையில் 350 படிக்கட்டுகள் உள்பட கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று அனைத்து கோவில்களிலும் சிவராத்திரி விழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

மகா சிவராத்திரியையொட்டி நம்பாலகோட்டை சிவன் மலையில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 11 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணி முதல் பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மலர்கள், வில்வ இலைகளால் லட்சார்ச்சனையும், தொடர்ந்து நாளை(புதன்கிழமை) காலை 6 மணி வரை சிவலிங்கம்-நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகங்கள், அலங்கார, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

வீதி உலா 

இது தவிர கல்லிங்கரை, பார்வுட், செவிடிப்பேட்டை, ஈசன் மலை, நடுவட்டம் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதேபோன்று பந்தலூர் தாலுகா எருமாடு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி வீதி உலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story