திருவொற்றியூரில் இறுதிச்சடங்கில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 8 பேர் கைது


திருவொற்றியூரில் இறுதிச்சடங்கில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 8 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2022 7:04 PM IST (Updated: 27 Feb 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் இறுதிச்சடங்கில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் சேர்ந்த 8 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூர், பலகைத் தொட்டி குப்பத்தை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 41). இவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வீட்டின் முன், குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே போதையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் செல்வமுருகன் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்பதன பெட்டியை கீழே தள்ளி விட்டனர். பெட்டியுடன் உடல் கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமுருகனின் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த கோஷ்டி மோதலில் இருதரப்பைச் சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்வமுருகனின் உறவினர்கள், எண்ணூர் விரைவு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருவொற்றியூர் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதுபற்றி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் சேர்ந்த விஜய் (27), ராம்குமார் (26), சதீஷ் (21), சுதாகர் (28), நவீன் (22), குமரேசன் (22), அஜித்குமார் (24), பாலசந்தர் (32) ஆகிய 8 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story