உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 11-ந்தேதி ஆர்ப்பாட்டம்


உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 11-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2022 9:27 PM IST (Updated: 27 Feb 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் தாலுகாவில் 1 மாதமாக குடிநீர் வராததை கண்டித்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாய்மேடு:
வேதாரண்யம் தாலுகாவில் 1 மாதமாக குடிநீர் வராததை கண்டித்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளைச் செயலாளர் பாலகுரு வரவேற்றார். 
இதில் மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த வீரப்பன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் செங்குட்டுவன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத்திட்டத்தை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும். வேதாரண்யம் தாலுகாவில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டிப்பது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர் சாய்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை)  வேதாரண்யம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பபாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக தகட்டூர் கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தா. பாண்டியனின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

Next Story