பல்லடம் பகுதியில் நோய் தாக்குதலால் வெங்காய சாகுபடி பாதிக்கும் அபாயம்


பல்லடம் பகுதியில்  நோய் தாக்குதலால் வெங்காய சாகுபடி பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 27 Feb 2022 9:41 PM IST (Updated: 27 Feb 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் பகுதியில் நோய் தாக்குதலால் வெங்காய சாகுபடி பாதிக்கும் அபாயம்

பல்லடம்,
பல்லடம் பகுதியில்  நோய் தாக்குதலால் வெங்காய சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெங்காய சாகுபடி
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம்  பிற மாவட்டங்கள், பக்கத்து மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர்.
 தற்போது வெங்காய அறுவடை தொடங்க உள்ளநிலையில், நோய் தாக்குதலால் வெங்காய செடிகள் கருகிவருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து வெங்காய விவசாயிகள் கூறியதாவது:-
 கார்த்திகை பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தோம். அவை விளைந்து தற்போது அறுவடை செய்யப்படும் நிலையில் செடிகளில் நோய் ஏற்பட்டு வெங்காய செடிகள் கருகி வருகின்றன. வெங்காய பயிரின் நுனிப்பகுதி முழுவதும் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் உறிஞ்சப்பட்டு வெள்ளையாக காட்சியளிக்கிறது.
மகசூல் பாதிப்பு 
 இதனால், வெங்காய விளைச்சல் அதிகளவில் பாதிக்கும். ஏற்கனவே வெங்காயத்திற்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலைப்படும் நிலையில் வெங்காய செடிகளில் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story