குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திண்டுக்கல்லில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விசுவாசம் (32) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி விசுவாசம், பிராங்களின் (48) ஆகிய 2 பேரும் தர்மராஜை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். அதில் விசுவாசத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டர் விசாகனிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் விசுவாசத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் விசுவாசத்தை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story